இந்தியாவில் ஜீப் காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஃபியட்

ஃபியட் நிறுவனம் முன்புற பேஸஞ்சர் இருக்கை பக்கம் அமைந்துள்ள காற்றுப்பை பிரச்னை தொடர்பாக ஜீப் காம்பஸ் மாடல்களை இந்தியாவில் திரும்ப அழைக்கிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை தயாரிக்கப்பட்ட மாடல்களில் இந்த பிரச்னை இருப்பதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜீப் காம்பஸ் மாடல் அமெரிக்காவிலும் திரும்ப அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஜீப் நிறுவனத்திற்கு எந்த ஒரு புகார்களும் வரவில்லை. எனினும் ஜீப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தானாக முன்வந்து காம்பஸ் மாடல்களை திரும்ப அழைத்துள்ளது. ஜீப் காம்பஸ் மாடலை வைத்துள்ளவர்கள் அருகில் உள்ள ஜீப் ஷோரூமிற்கு சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். மேலும் பிரச்னை தீர்க்கும் வரை முன்புற பேஸஞ்சர் இருக்கையை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.