2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் ஃபியட் டிபோ

ஃபியட் நிறுவனம் புதிய டிபோ எனும் புதிய மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மற்ற நாடுகளில் ஈகே  என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. இந்த மாடல் 4500 மில்லி மீட்டர் நீளமும், 1780 மில்லி மீட்டர் அகலமும், 1480  மில்லி மீட்டர்  உயரமும் மற்றும் 2640  மில்லி மீட்டர்  வீல் பேசும் கொண்டது.

இந்த மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1.3 மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் ஆகியவற்றில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் சிஸ்டதிலும் கிடைக்கும். உட்புறத்தில்  டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் மேலும் ஃபியட் மாடலில் உள்ள அணைத்து சிறப்புகளும் இதிலும் உள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.