ஃபியட் - 124 ஸ்பைடர் மாடல் வெளிப்படுத்தப்பட்டது

ஃபியட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 124 ஸ்பைடர் மாடலை வெளிப்படுத்தியது. இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் பினின்ஃபரினா நிறுவனம் வடிவமைத்த பழைய 124 ஸ்பைடர் மாடலின் வடிவத்தையே அடிப்படையாக கொண்டு இந்த மேம்படுத்தப்பட்ட 124 ஸ்பைடர்  மாடலையும் வடிவமைத்துள்ளது. 

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் அதிக ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முன்புற கிரில், முகப்பு விளக்குகள், புதிய இரட்டை புகை போக்கிகள்  மற்றும் பின்புற விளக்குகள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 160 bhp திறனையும் 249.5 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு மத்தியில் அல்லது இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.