ரூ.7.01 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஃபியட் அர்பன் கிராஸ்

ஃபியட் நிறுவனம் அர்பன் கிராஸ் மாடலை ரூ.7.01 லட்சம் சென்னை  ஷோரூம்  ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. ஆக்டிவ், டைனமிக் மற்றும் எமோஷன் என மூன்று வேரியன்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

வேரியன்ட்  வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
ஃபியட் அர்பன் கிராஸ்  ஆக்டிவ் - ரூ.7.01 லட்சம்
ஃபியட் அர்பன் கிராஸ்  டைனமிக் - ரூ.7.63 லட்சம்
ஃபியட் அர்பன் கிராஸ்  எமோஷன் - ரூ.9.85 லட்சம்

இந்த மாடல் அவென்ச்சுரா மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முகப்பு விளக்குகள், அலாய் வீல், பிளாஸ்டிக் கிலாடிங்குகள் என சில ஒப்பனை மாற்றங்களை செய்து இந்த மாடல் உருவாக்கியுள்ளது ஃபியட் நிறுவனம். உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய 5 இன்ச் டச் ஸ்க்ரீன்  இன்போடைன்மெண்ட்  சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் அபார்த் புண்டோ மாடலில் உள்ள அதே 1.4 லிட்டர் T - ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 140bhp (5500 rpm) திறனும்  212Nm (2000 - 4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இது லிட்டருக்கு 17.1 Kmpl  மைலேஜ் தரம் என ARAI  சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் 1.3 லிட்டர் மல்டி ஜெட் எஞ்சினிலும் கிடைக்கும். இது 93bhp  திறனும்  210Nm  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இது லிட்டருக்கு 20.0 Kmpl  மைலேஜ் தரம் என ARAI  சான்றளித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.