விரைவில் அபார்த் லீனியாவை வெளியிடும் ஃபியட்

ஃபியட் நிறுவனம் அபார்த் பிராண்டில் வடிவமைக்கப்பட்ட அதிக திறன் கொண்ட அபார்த்  லீனியாவை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 1.4 லிட்டர் T - ஜெட் பெட்ரோல் என்ஜின் தான் இதிலும் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் இதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டிருக்கும். 145bhp (5500 rpm) திறனும்  212Nm (2000 - 4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டதாக இருக்கும். இந்த என்ஜின் தான் அபார்த் புண்டோ மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அபார்த் புண்டோ மாடல் போலாவே வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். குறிப்பாக அலாய் வீல் தேள் போன்று வடிவம் கொண்டதாக இருக்கும். மேலும் ஏற்க்கனவே இருக்கும் லீனியா மாடலை விட 1 முதல் 1.5 லட்சம் அதிக விலை கொண்டதாக  இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.