2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் ஜீப் மாடல்களை காட்சிப்படுத்தும் ஃபியட்

அமெரிக்காவை சேர்ந்த ஃபியட் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சியில் ஜீப் மாடல்களை காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் மீண்டும் ஜீப் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் செரோக்கி, வ்ரேங்க்ளர் மற்றும் ரெனேகேட் ஆகிய மாடல்களை வெளியிடும் முனைப்பில் ஃபியட்  நிறுவனம் இருக்கிறது. 

2012 ஆம் ஆண்டே ஃபியட்  நிறுவனம் வெளி நாட்டு பிராண்டுகளை இந்தியாவில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு தான் அபாரத் பிரண்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதேபோல் ஜீப் பிரண்டும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜீப் மாடல்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.