ஐந்தாம் தலைமுறை லேன்ட் ரோவர் டிஸ்கவரி மாடலின் படங்கள் வெளிப்படுத்தப்பட்டது

லேன்ட் ரோவர் நிறுவனம் உலகின் சிறந்த ஆப் ரோடு மாடல்களில் ஒன்றான டிஸ்கவரியின் ஐந்தாம் தலைமுறை மாடலின் படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

டிஸ்கவரி மாடலின் பாக்சி வடிவமைப்பில் இருந்து இந்த மாடல் சற்று மாற்றப்பட்டுள்ளது. எவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல்களின் பாகங்கள் அதிகம் இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 3.0 லிட்டர் எஞ்சினில்  தான் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கபடுகிறது. அதே போல் 7 பேர் அமரக்கூடிய இருக்கை வசதி கொண்டதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.