குளோபல் சிதைவு சோதனையில் 5 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்ற இந்தியாவின் முதல் கார்: டாடா நெக்ஸன்

டாடா நெக்ஸன் காம்பேக்ட் SUV மாடல் கடந்த ஆகஸ்ட் மாதம் குளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்று சாதனை படைத்தது. டாடா நிறுவனம் சில மேம்பாடுகளை செய்து மீண்டும் சோதனை செய்தது, தற்போது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்று சாதனை படைத்துள்ளது. முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு கார் முதல் முறையாக குளோபல் சிதைவு சோதனையில் 5 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா நெக்ஸன் கார் ஒரு சரித்திரத்தையே படைத்துள்ளது என்று தான் குறிப்பிட வேண்டும். ஆனால் சிரியவர்களுக்கான பாதுகாப்பில் அதே 3 ஸ்டார் தர மதிப்பீட்டை தான் பெற்றுள்ளது.

மேலும், பக்கவாட்டு மோதல் சோதனையிலும் டாடா நெக்ஸன் சிறப்பான பாதுகாப்பை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்பான கார் என நெக்ஸன் மாடலை குறிப்பிட்டுள்ளது. இதே போல் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சோதனையில் டாடா செஸ்ட் மாடல் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.  டிசம்பர் 7 ஆம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்படும் டாடா நெக்ஸன் மாடல்கள் தான் 5 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.