விரைவில் வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு - ஈகோஸ்போர்ட்

அமெரிக்காவை சேர்ந்த கார் நிறுவனமான ஃபோர்டு மேம்படுத்தப்பட்ட ஈகோஸ்போர்ட் மாடலை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தீபாவளி அல்லது கிருஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்புறம் உட்புறத்தில் அதிக ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் ஆனால் என்ஜினில் அதிக மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக பின்புறத்தில் உள்ள ஸ்பேர் வீலை எடுத்துவிட்டது ஃபோர்டு நிறுவனம். வீலின் அளவும் மாற்றப்பட்டுள்ளது. உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. என்ஜினில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என எந்த ஒரு தகவலும் இல்லை.

தற்போது இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1 லிட்டர்  ஈகோபூஸ்ட்  பெட்ரோல்  என்ஜின் என மூன்று வித என்ஜின்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.