வெளியிடப்பட்டது ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடல்கள்

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் ஃபிகோ ஹேட்ச் மற்றும் ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் மாடல்களின் ஸ்போர்ட்ஸ் எடிசனை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் புதிய ரிட்டர்ன் சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினில் டைட்டானியம் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். 

வேரியன்ட் வாரியாக இதன் டெல்லி ஷோரூம் விலை விவரம்:

ஃபிகோ ஸ்போர்ட்ஸ் பெட்ரோல் - ரூ 6,31,900
ஃபிகோ ஸ்போர்ட்ஸ் டீசல் - ரூ 7,21,600 

ஆஸ்பயர் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்  - ரூ 6,50,900
ஆஸ்பயர் ஸ்போர்ட்ஸ் டீசல் - ரூ 7,60,600

எஞ்சினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். 1.2 லிட்டர்  பெட்ரோல்  எஞ்சின்  88 bhp (6300 rpm) திறனும் 112Nm (4000 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மற்றும் இதன் 1.5 லிட்டர் டீசல்  எஞ்சின்  100 bhp (3750 rpm) திறனும் 215Nm (1750-3000 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல்கள் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த மாடலில் குறிப்பாக புதிய ரிட்டர்ன் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இது சிறந்த கையாளுமையையும் ஓட்டுதல் அனுபவத்தையும் தரும்.

மேலும் இந்த மாடல்களின் வெளிப்புறத்தில் புதிய கருப்பு நிற முன்புற கிரில், கருப்பு நிற முகப்பு விளக்கு பெசல், கருப்பு அல்லது வெள்ளை நிற ரூப் மற்றும் பக்கவாட்டு கண்ணாடி 15 இன்ச் கருப்பு நிற அலாய் வீல், பின்புற ஸ்பாய்லர் மற்றும் S  கிராபிக்ஸ் ஆகியவையும் உட்புறத்தில் புதிய லெதர் ஸ்டேரிங் வீல் கவர் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.