ரூ. 8.58 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ஃபோர்டு ஈகோஸ்போர்ட் பிளாக் எடிசன்

ஃபோர்டு நிறுவனம் ரூ. 8.58 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் ஈகோஸ்போர்ட் பிளாக் எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது. காம்பேக்ட் SUV செக்மெண்டில்  பெருகி வரும் போட்டியை சமாளிக்க இந்த சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது ஃபோர்டு.

இந்த சிறப்பு பதிப்பு மாடல் Trend+, Titanium & Titanium+ எனும் மூன்று வேரியண்டுகளில் மட்டும் கிடைக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன், 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீஸல் என்ஜின் என அனைத்து என்ஜின் ஆப்சன்களிலும் கிடைக்கும்.

இந்த பிளாக் எடிசன் மாடலில் கருப்பு வண்ண கிரில், கருப்பு வண்ண பக்கவாட்டு கண்ணாடி, கருப்பு வண்ண பனி விளக்கு அறை, கருப்பு வண்ண முகப்பு விளக்கு அறை, கருப்பு வண்ண ரூப் ரைல் மற்றும் கருப்பு வண்ண அலாய் வீல் என வெளிப்புறம் முழுவதும் கருப்பு வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.   

வேரியன்ட் வாரியாக ஃபோர்டு ஈகோஸ்போர்ட் பிளாக் எடிசன் மாடலின் டெல்லி ஷோ ரூம் விலை விவரம்:

1.5L Petrol Titanium M/T - Rs 8,74,800
1.5L Petrol Titanium A/T- Rs 9,79,800
1.0L EcoBoost Trend+ - Rs 8,58,500
1.0L EcoBoost Titanium+ - Rs 9,63,300
1.5L Diesel Trend+ - Rs 8,88,500
1.5L Diesel Titanium - Rs 9,34,800
1.5L Diesel Titanium+ - Rs 9,93,300

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.