வெளியிடப்பட்டது புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் S மற்றும் ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன்

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் மாடலின் S மற்றும் சிக்னேச்சர் எடிசன் என இரண்டு புதிய வேரியன்ட்டுகளை வெளியிட்டுள்ளது. ஈக்கோஸ்போர்ட் S மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் புதிய 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மாடலில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மாடல் டைட்டானியம் வேரியன்ட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஈக்கோஸ்போர்ட் S மற்றும் சிக்னேச்சர் எடிசன் மாடலின் விலை விவரங்கள்:
ஈக்கோஸ்போர்ட் S

  • பெட்ரோல் - ரூ 11.37 லட்சம் 
  • டீசல் - ரூ 11.89 லட்சம் 

ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன்

  • பெட்ரோல் - ரூ 10.40 லட்சம் 
  • டீசல் - ரூ 10.99 லட்சம் 

இந்த இரண்டு மாடல்களிலுமே சன்ரூப், ஸ்மோக்ட் முகப்பு விளக்குகள், புதிய அலாய் வீல், பின்புற ஸ்பாய்லர், ரூப் ரயில் ஆகிய ஒப்பனை மாற்றங்கள் வெளிப்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் ஈக்கோஸ்போர்ட் S மாடலில் பிரவுன் நிற வண்ணத்திலும் ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மாடலில் ப்ளூ வண்ணத்திலும் அலங்காரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் S மாடல் புதிய 1.0 லிட்டர் ஈக்கோ பூஸ்ட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். பெட்ரோல் எஞ்சின் 123Bhp திறனையும் 170Nm இழுவைத்திறனையும் மற்றும் இதன் டீசல் எஞ்சின் 100Bhp திறனையும் 205Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் 1.0 லிட்டர் ஈக்கோ பூஸ்ட் பெட்ரோல் மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டமும் டீசல் மாடலில் ஐந்து ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஈக்கோஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் மாடல் முந்தய 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் தேர்வுகளில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் 123Bhp @6500rpm திறனையும் 150Nm @4500rpm இழுவைத்திறனையும் வழங்கும். மற்றும் இதன் டீசல் எஞ்சின் 100Bhp @3750rpm திறனையும் 205Nm @1750-3250rpm இழுவைத்திறனையும் வழங்கும். இரண்டு எஞ்சின்களிலும் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.