ஒரு லட்சம் வரை விலை குறைகிறது ஃபோர்டு - ஈகோஸ்போர்ட்

ஃபோர்டு நிறுவனம் ஈகோஸ்போர்ட் காம்பேக்ட் SUV  மாடலின் விலையை 1 லட்சம் வரை குறைத்துள்ளது. மாருதி சுசுகி விட்டாரா பரீஸா மாடலின் போட்டியை சமாளிக்க இந்த விலை குறைப்பை செய்துள்ளதாக ஆட்டோ மொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஃபோர்டு - ஈகோஸ்போர்ட் மாடல் தான் இதுவரை காம்பேக்ட் SUV  செக்மெண்டில் அதிகம் விற்பனை ஆகும் மாடலாக இருந்து வந்தது. தற்போது இந்த மாடல் ரூ. 54000 முதல் ரூ. 1.12 லட்சம் வரை வேரியன்டிற்கு ஏற்றவாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.
வேரியன்ட் வாரியாக இதன் தற்போதைய சென்னை ஷோ ரூம் விலை:-
Ambient - பெட்ரோல் - ரூ.681921
Trend - பெட்ரோல் - 
ரூ.755303
Titanium - பெட்ரோல் - 
ரூ.872958
Titanium AT - பெட்ரோல் - 
ரூ.979825
Ecoboost  Trend+ - பெட்ரோல் - 
ரூ.834689
Ecoboost Titanium+ - பெட்ரோல் - 
ரூ.963032
Ambient - டீசல் - 
ரூ.742988
Trend - டீசல் - 
ரூ.816370
Trend+ - டீசல் - 
ரூ.865223
Titanium - டீசல் - 
ரூ.934024
Titanium+ - டீசல் - 
ரூ.993565

இந்த மாடல்  1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின், 1 லிட்டர்  ஈகோபூஸ்ட்  பெட்ரோல்  என்ஜின் மற்றும்  1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் என மூன்று என்ஜினில் கிடைக்கும். இதன்  1.5 லிட்டர் பெட்ரோல்  எஞ்சின் 1499CC கொள்ளளவும், 1 லிட்டர்  ஈகோபூஸ்ட்  பெட்ரோல்  என்ஜின் 999cc கொள்ளளவும்  மற்றும் டீசல் என்ஜின் 1498cc கொள்ளளவும் கொண்டது. 

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல்  எஞ்சின்  112 bhp (6300 rpm) திறனும் 140Nm (4400 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல்  எஞ்சினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  15.85 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல்  15.6 Kmpl  மைலேஜும் தரும் என ARAI சான்றளிதுள்ளது. 
 

இதன் 1 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல்  எஞ்சின்  125 bhp (6000 rpm) திறனும் 170Nm (1400-4500 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் 1 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல்  எஞ்சின்   18.88 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. 
 

இதன் டீசல்  எஞ்சின்  91 bhp (3750 rpm) திறனும் 204Nm (2000-2750 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் டீசல்   எஞ்சின்   22.27 Kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. 


மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.