ரூ.24.1 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்பட்தப்பட்ட ஃபோர்டு - என்டவர்

ரூ.24.1 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் அடுத்த தலைமுறை என்டவர் மாடலை வெளியிட்டது ஃபோர்டு நிறுவனம். இந்த மாடலில் ஃபோர்டு நிறுவனத்தின் டெர்ரைன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் கற்கள், மணல் மற்றும் பனி என மூன்று  டெர்ரைன் ஆப்சன்கள் உள்ளது. மேலும் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், பகல் நேரத்தில் ஒளிரும் லேட் விளக்குகள் என ஏராளமான வசதிகள் இந்த மாடலில் கிடைக்கும்.

2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் 2.2 லிட்டர் என்ஜின் 160 பிப் திறனையும் 385 Nm இழுவைதிறனையும் வழங்கும் மற்றும் 3.2 லிட்டர் என்ஜின் 200 பிப் திறனையும் 470 Nm இழுவைதிறனையும் வழங்கும்.   இந்த மாடல் இரண்டு வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும் கிடைக்கும். இந்த மாடல் 225 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது. மேலும் இந்த மாடல் 800 மில்லி மீட்டர் வரை ஆழம் உள்ள நீரிலும் செல்லும். 

இந்த மாடல் 6 வேரியண்டுகளிலும் மற்றும் சிவப்பு, வெள்ளை, கிரே, சில்வர், கருப்பு மற்றும் ப்ரௌன் என மொத்தம் 6 வண்ணங்களிலும் கிடைக்கும். மேலும் இந்த மாடல் டொயோடா பார்சுனர், செவ்ரோலேட் ட்ரைல்ப்ளேசர் மற்றும் மிட்சுபிசி பஜிரோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.