மேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலை மார்ச் 15 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளது. அதற்காக சில டீசர் படங்களை ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் ஃபோர்டு ஆஸ்பயர் மாடலை போல உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும், புதிய 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் முந்தய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் இந்த மாடல் கிடைக்கும்.

புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ மாடலில் ஃபிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பயர் மாடலில் உள்ளது போன்ற க்ரில் மற்றும் முன்புற அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதி மற்றும் பின்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. உட்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்புறம் போலவே உட்புறமும் ஃபிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பயர் மாடலில் உள்ளது போல தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரட்டை வண்ண உட்புற வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் ஆறு காற்றுப்பை, EBD உடன் கூடிய ABS, டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் புதிய 3 சிலிண்டர் கொண்ட1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் முந்தய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் 96Bhp திறனையும் 120Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது தான் இந்தியாவில் தற்போது இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின்களில் டர்போ சார்ஜர் இல்லாமல் அதிக திறனை தரும் எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100Bhp திறனையும் 215Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த இரண்டு என்ஜின்களும் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும்.

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 123Bhp திறனையும் 150Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் ஆறு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய ஃபிகோ மாடலின் விலை முந்தய மாடலை விட சிறிது குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.