16,444 ஈகோஸ்போர்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஃபோர்டு நிறுவனம்

ஃபோர்டு இந்தியா நிறுவனம் பின்புற சஸ்பென்சனில் உள்ள ட்விஸ்ட் பீம் போல்ட் குறைபாடு காரணமாக 16,444 ஈகோஸ்போர்ட் கார்களை திரும்ப அழைத்துள்ளது. 2013 ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் முதல் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் இந்த குறைபாடு இருப்பதாக ஃபோர்டு இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

பின்புற சஸ்பென்சனில் உள்ள ட்விஸ்ட் பீம் போல்ட் சரியான அளவுகளின் படி இல்லாததால் அதிக அழுத்தம் காரணமாக உடையும் அபாயம் இருக்கும் எனவும் இதனால் கையாளுமை திறன் குறையும் எனவும் ஃபோர்டு இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

குறைபாடு உள்ள கார்களின் உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும் எனவும் அவர்கள் அருகில் உள்ள ஷோ ரூமில் இலவசமாக சரி செய்து கொள்ளலாம் எனவும் ஃபோர்டு இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.