இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் ஃபோர்டு முஸ்டங்

ஃபோர்டு  நிறுவனம் இந்தியாவில் ஆறாம் தலைமுறை முஸ்டங் மாடலை ரூ. 65 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் சில நாட்களுக்கு  முன்பு தான் வெளியிட்டது. வெளியிடப்பட்டு சில நாட்களிலேயே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் எனும் பெருமையை பெற்றுள்ளது. ஃபோர்டு நிறுவனம் இந்தியாவுக்கு 100 கார்கள் என எல்லை வைத்திருந்தது. அவற்றில் 35 கார்களை ஏற்கனவே விற்றுவிட்டது. மேலும் 100 கார்களின் முன்பதிவு முடிந்து விட்டது. இந்த செக்மென்ட்டில் உள்ள மற்ற கார்கள் வருடத்திற்கு 10 கார்கள் விற்பதே சிரமமாக இருக்கும் போது  ஃபோர்டு  நிறுவனம் சாதாரணமாக 35 கார்களை விற்றுள்ளது.

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற மாடல்களில் ஃபோர்டு - முஸ்டங் மிகவும் குறிப்பிடத்தக்கது. தொடர்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மாடல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு கூப் வடிவினாலான மாடல்.இந்த மாடலில் 19 இன்ச் அலாய் வீல், ஸெனான் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், வாய்ஸ் கமெண்ட் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என சகல வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் கருப்பு, சில்வர், வெள்ளை, மஞ்சள், சிவப்பு மற்றும் மேக்னெட்டிக் என ஆறு வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த மாடல் உலக அளாவில் மூன்று விதமான என்ஜினில் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் 5.0 லிட்டர் V8 பெட்ரோல் என்ஜினில் மட்டும் கிடைக்கும். இந்த என்ஜின் 437 Bhp திறனும் 540 இழுவைதிறனும் கொண்டது. இந்த திறன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மூலம் வீல்களுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலில் நார்மல், ஸ்போர்ட்+, ட்ராக் மற்றும் ஸ்னோ என நான்கு டிரைவிங் மொடுகள் உள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.