ரூ. 65 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது ஃபோர்டு முஸ்டங்

ஃபோர்டு  நிறுவனம் இந்தியாவில் ஆறாம் தலைமுறை முஸ்டங் மாடலை ரூ. 65 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் முன்பதிவு டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறுகிறது தொடர்ந்து மற்ற நகரங்களிலும் முன்பதிவு தொடங்கப்படும். 

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற மாடல்களில் ஃபோர்டு - முஸ்டங் மிகவும் குறிப்பிடத்தக்கது. தொடர்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மாடல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு கூப் வடிவினாலான மாடல்.இந்த மாடலில் 19 இன்ச் அலாய் வீல், ஸெனான் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED  விளக்குகள், வாய்ஸ் கமெண்ட் 8 இன்ச் டச் ஸ்க்ரீன்  இன்போடைன்மெண்ட் சிஸ்டம்   என சகல வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் கருப்பு, சில்வர், வெள்ளை, மஞ்சள், சிவப்பு மற்றும் மேக்னெட்டிக் என ஆறு வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த மாடல் உலக அளாவில் மூன்று விதமான என்ஜினில் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் 5.0 லிட்டர் V8 பெட்ரோல் என்ஜினில் மட்டும் கிடைக்கும். இந்த என்ஜின் 437 Bhp திறனும் 540 இழுவைதிறனும் கொண்டது. இந்த திறன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மூலம் வீல்களுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலில் நார்மல், ஸ்போர்ட்+, ட்ராக் மற்றும் ஸ்னோ என நான்கு டிரைவிங் மொடுகள் உள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.