42,300 ஃபிகோ மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் கார்களை திரும்ப அழைக்கிறது ஃபோர்ட்

மென்பொருள் பிரச்சனை காரணமாக ஃபோர்ட்  நிறுவனம் சுமார் 42,300 ஃபிகோ மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் கார்களை திரும்ப அழைக்கிறது. 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதிலிருந்து இன்று வரை விநியோகம் செய்யப்பட்ட அணைத்து கார்களும் இதில் அடங்கும். 

பாதிக்கப்பட்ட கார்களில் மென்பொருள் பிரச்சனை இருப்பதால் தேவைப்படும் நேரங்களில் காற்றுப்பை இயங்காது. அதனால் ஃபோர்ட்  இந்த மென்பொருள் பிரச்சனையை டீலர்கள் வாயிலாக இலவசமாக செய்து தர இருக்கிறது. இதற்கான அழைப்பை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்  ஃபோர்ட் நிறுவனமே அனுப்பியுள்ளது.
 

இந்த பிரச்சனை கண்டறிய தான் சில நாட்களுக்கு முன்பு புதிய ஃபிகோ மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் கார்களின் டெலிவெரியை நிறுத்தியது ஃபோர்ட்.  காம்பேக்ட் செடான் செக்மண்டில் ஃபிகோ ஆஸ்பயர் தான் 6 காற்றுப்பைகள் கொண்ட மாடலாக இருந்தது ஆனால் தற்போது அதிலேயே பிரச்சனை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.