விரைவில் விடைபெற போகிறது ஃபோர்டு - ஃபிகோ, கிளாசிக் மற்றும் ஃபியஸ்டா

இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த ஃபோர்டு - ஃபிகோ, கிளாசிக் மற்றும் ஃபியஸ்டா ஆகிய மாடல்களின் உற்பத்தியை விரைவில் நிறுத்த இருக்கிறது ஃபோர்டு நிறுவனம். தோற்றத்தில் பழமையாக இருப்பதாலும் புதிய மாடல்கள் வெளியிட்டிருப்பதாலும் ஃபோர்டு - ஃபிகோ மற்றும்  கிளாசிக் மாடல்களின் உற்பத்தியை நிறுத்த இருக்கிறது.  

சில நாட்களுக்கு முன்பு கிளாசிக் மாடலுக்கு மாற்றான  ஃபோர்டு - ஃபிகோ ஆஸ்பயர் மாடலை வெளியிட்டது. இந்த மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஹேட்ச்பேக் மாடலான் ஃபோர்டு - ஃபிகோ கா மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது. இதனால் ஃபோர்டு - ஃபிகோ மற்றும்  கிளாசிக் மாடல்களின் உற்பத்தியை நிறுத்த இருக்கிறது.

மேலும் ஃபியஸ்டா மாடல் விற்பனையில் மிகவும் குறைவான எண்ணிக்கையை பதிவு செய்வதால் இந்த மாடலையும் நிறுத்த இருக்கிறது ஃபோர்டு நிறுவனம்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.