வெளிப்படுத்தப்பட்டது புதிய நான்காம் தலைமுறை ஆடி A8

ஆடி நிறுவனம் பார்சிலோனாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தம் புதிய நான்காம் தலைமுறை ஆடி A8 மாடலை வெளிப்படுத்தியது. இந்த மாடல் ஆடி நிறுவனத்தின் புதிய டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் புதிய ஷார்ப் மேட்ரிக்ஸ் LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் என முற்றிலும் புதுமையாக இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் புதிய 10 இன்ச் கொண்ட டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் ஏர் வென்ட் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த மாடலில் லெவல் 3 அடானமஸ் எனும் தொழில்நுட்பம் கிடுக்கப்பழட்டுள்ளது. இதன் மூலம் இந்த தானாக பார்கிங்கும் ட்ராபிக்கிலும் செல்லும் வல்லமை கொண்டது .

இந்த மாடல் 3.0 லிட்டர் V6 பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் 4.0 லிட்டர் V8 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் வெளியிடப்படும். மேலும் இந்த மாடல் 6.0 லிட்டர் V12 என்ஜினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அனைத்து மாடல்களிலும் 8 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஐரோப்பாவில் இந்த வருட இறுதிக்குள் வெளியிடப்படும். இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு மத்தியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.