ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சி: ஃபோகஸ் RS மாடலின் விவரங்களை வெளியிட்டது ஃபோர்டு

ஃபோகஸ் RS மாடலின் அனைய்ஹு விவரங்களையும் ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிட்டது ஃபோர்டு நிறுவனம். இந்த மாடலில் 2.3 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 350 bhp திறனையும் 440 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 வினாடிகளில் கடக்கும் மேலும் அதிகபட்சமாக மணிக்கு 265 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடல் மிகச்சிறந்த  செயல்திறனையும் தொழில்நுட்பத்தையும் கொண்டது மேலும் இந்த மாடலில் ஃபோர்டு ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கிடைக்கும்.

மேலும் இதன் விலை இந்திய மதிப்பில் 24 லட்சம் ரூபாய் இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.