ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சி: புதிய கிரிப்ஸ் கிராஸ் ஓவர் கான்செப்ட் மாடலை வெளியிட்டது நிசான்

நிசான் நிறுவனம் புத்தம் புதிய கிராஸ் ஓவர் கிரிப்ஸ் கான்செப்ட் மாடலை வெளியிட்டது. இந்த மாடல் ரேசிங் பை சைக்கிள் வடிவத்தினை அடிப்படையாக  கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாடல் நிசானின் Z பிராண்டில் வெளியிடப்படும். எனவே இந்த மாடல் Z சீரீஸ் மாடலின் கிராஸ் ஓவர் மாடலாக இருக்கும். பெரும்பாலும் Z சீரீஸ் மாடல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே  வெளியடப்படும். அனால் இந்த மாடல் அவ்வாறு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது  Z பிராண்டில் வெளியிடப்படும் முதல் ஹேட்ச் பேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது ஒரு கிராஸ் ஓவர் மாடல் என்பதற்காக அதிகாமான கிரௌண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் ரேசிங் கார்களில் உள்ளது போல 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல் மற்றும் டேஸ் போர்டு கொடுக்கப்பட்டுள்ளது.

என்ஜின் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. எப்போது வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்படவில்லை. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.