ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சி: மினி கிளப்மேன் அறிமுகப்படுத்தப்பட்டது

மினி கிளப்மேன் ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மினி கன்ட்ரிமென் மாடலின் அடிப்படையில் அதிக நீளத்துடன் உருவாக்கப்பட்ட மாடல். இந்த மாடல் 4253 மில்லி மேதர் நீளமும் 1800 மில்லி மீட்டர் அகலமும் கொண்டது. நீளம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் இதன் எடை 155 கிலோ கிராம் வரை கன்ட்ரிமென் மாடலை விட அதிகமாக இருக்கும். 

இந்தன் பின்புறம் கிளாசிக் வேன் மாடலில் இருப்பது போன்று இரண்டு காதவுகளை கொண்டிருக்கும். மேலும் இந்த மாடலில் பொருள்கள் வைக்கும் கொள்ளளவு 360 லிட்டரிலிருந்து 1250 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை கன்ட்ரிமென் மாடலில் இருக்கும் அதே என்ஜினில் தன கிடைக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படும். இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

BMW இந்தியா நிறுவனம் இந்தியாவில் மினி கூப்பர் D 5 டோர், மினி கூப்பர் D 3 டோர், மினி கூப்பர் S 5 டோர், மினி கூப்பர் கன்வெர்டிபில் மற்றும் மினி கூப்பர் கன்ட்ரிமென் ஆகிய ஐந்து மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.