இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்துகிறது செவ்ரோலெட்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செவ்ரோலெட் பிராண்ட் கார்களின் விற்பனையை இந்த ஆண்டுடன் நிறுத்துவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் செவர்லே கார்கள் பெரியளவில் சந்தையை ஏற்படுத்தவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் உள்ள ஹாலோல் தொழிற்சாலையை சில நாட்களுக்கு முன்பு தான் முடியாது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த ஆலையை சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் விலைக்கு வாங்க முயற்சி செய்து வருகிறது. பூனேவில் உள்ள டெலிகன் ஆலையை மூடப்போவதில்லையாம். இங்கிருந்து கார் ஏற்றுமதியை எப்போதும் போல தொடர இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதே போல் பெங்களூருவில் உள்ள தொழில் நுட்ப மையமும் தொடர்ந்து இயங்கும் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் ப்ரெசிடெண்ட் கூறும் பொது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள், டீலர்கள் மற்றும் சப்ளையர்கள் ஆகியவர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும் மேலும் விற்பனைக்கு பிந்தைய சேவை தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.