நியூ யார்க் வாகன கண்காட்சியில் வெளியிடப்படும் ஜெனெசிஸ் நியூ யார்க் கான்செப்ட்

ஹுண்டாய் நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான  ஜெனெசிஸ்  நியூ யார்க் கான்செப்ட் மாடலை நியூ யார்க் வாகன கண்காட்சியில் வெளியிட இருக்கிறது. ஹுண்டாய் நிறுவனம் தனது  சொகுசு கார்களை ஜெனெசிஸ் பிராண்டில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்ததே. 

சில நாட்களுக்கு முன்பு தான் இந்த மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது ஹுண்டாய். இந்த படத்தில் பார்க்கும் பொது இது கம்பீரமான தோற்றத்தை தருகிறது. இந்த படத்தை தவிர வேறு எந்த தகவலையும் இதுவரை ஹுண்டாய் நிறுவனம் வெளியிடவில்லை.
 

2016 ஆம் ஆண்டு நியூ யார்க்கில் நடைபெறும் கண்காட்சியில் இந்த மாடல் வெளிப்படுத்தப்படும். மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.