ஜெனிவா மோட்டார் கண்காட்சி 2017: மெக்லரன் 720S மாடலின் படங்கள்

மெக்லரன் நிறுவனம் 720S மாடலை அதிகாரப்பூர்வமாக ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தியது. இந்த மாடல் 650S மாடலுக்கு மாற்றாக வெளியிடப்பட உள்ளது.

இந்த மாடலில் 4.0 லிட்டர் கொண்ட ட்வின் டர்போ V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 720 Bhp திறனையும் 770 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் 100  கிலோமீட்டர் வேகத்தை 3 வினாடிகளிலும் 200 கிலோமீட்டர் வேகத்தை 5 வினாடிகளிலும் கடந்து விடும். மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 341 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடல் முந்தய மாடலை விட குறைவான எடை கொண்டதாகவும், வேகமானதாகவும் மற்றும் சிறந்த ஏரோ டைனமிக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.