ஜெனிவா மோட்டார் கண்காட்சி 2017: வெளிப்படுத்தப்பட்டது ஸ்கோடா ஆக்டேவியா RS 245

ஸ்கோடா நிறுவனம் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அதிக திறன் கொண்ட ஆக்டேவியா RS 245 மாடலை வெளிப்படுத்தியது. இது ஏற்கனவே இருக்கும் ஆக்டேவியா RS மாடலை விட 15 Bhp அதிக திறனும் 20 Nm அதிக இழுவைத்திறனும் கொண்டது.

ஐரோப்பிய சந்தையில் ஆக்டேவியா RS மாடல் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் டீசல் என்ஜினுடன் கிடைக்கிறது.  அனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள மாடல் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது 245 Bhp திறனும் 370 Nm இழுவைத்திறனும் கொண்டது.  மேலும் இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.6 வினாடிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. 

இந்த மாடல் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர் பாக்சில் கிடைக்கும். அதிக திறன் வாய்ந்த என்ஜின் மட்டுமல்லாமல் கூடுதலாக சில உபகரணங்களும் இந்த மாடலில் கிடைக்கும். எனினும் இந்தியாவில் வெளியிடப்படும் மாடல் இந்தியாவிற்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.