ஹோண்டா அமேஸ் மாடலின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை அமேஸ் காம்பேக்ட் செடான் மாடல் வரும் மே 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. இந்த மாடல்  2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது ஹோண்டா. அதன் பிறகு சில நாட்களுக்கு முன்பு மேம்படுத்தப்பட்ட அமேஸ் மாடலின் விவரங்களை தனது இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடலின் முன்பதிவு அணைத்து ஷோரூம்களிலும் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த மாடலை ரூ 21,000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பில் ஏராளமான மாற்றங்களை பெற்றுள்ளது.

இந்த மாடலின் முன்புறம் மற்றும் பக்கவாட்டுப்பகுதி முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. பின்புறம் மட்டும் தான் அதுவும் ஓரளவு தான் முந்தய அமேஸ் மாடலை நினைவுபடுத்துகிறது. இதன் முன்புறம் புதிய அக்கார்டு மாடலில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதால் சற்று பிரீமியம் மாடல் போன்ற தோற்றத்தை தருகிறது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் இந்த மாடல் கண்டிப்பாக மற்ற மாடல்களுக்கு சவாலான போட்டியை கொடுக்கும்.
 

என்ஜினில் எந்த மாற்றமும்  இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன்  பெட்ரோல் என்ஜின் 88 bhp (6000 rpm) திறனும் 109Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  டீசல் என்ஜின்  மாடல் 73 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் இரண்டு எஞ்சின் மாடலிலும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசனும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.