ரூ 6.48 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஹோண்டா அமேஸ் பிரிவிலேஜ் எடிசன்

ஹோண்டா நிறுவனம் அமேஸ் மாடலின் பிரிவிலேஜ் எடிசன் எனும் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் S(O) எனும் வேரியன்டில் மட்டுமே கிடைக்கும். இதன் பெட்ரோல் மாடல் ரூ 6.48 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் டீசல் மாடல் ரூ 7.73 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

இந்த சிறப்பு பதிப்பு மாடலில் உள்ள சிறப்புகள்

1. பாடி டீகேல்ஸ்
2. பிரிவிலேஜ் எடிசன் எம்பலம்
3. 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் 
4. பிரிவிலேஜ் எடிசன் எம்பலத்துடன் கூடிய பீஜ் வண்ண இருக்கை கவர்
5. புதிய சென்டர் ஆர்ம் ரெஸ்ட்
6. பின்புற பார்க்கிங் சென்சார்

என்ஜினில் எந்த மாற்றமும்  இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன்  பெட்ரோல் என்ஜின் 88 bhp (6000 rpm) திறனும் 109Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  டீசல் என்ஜின்  மாடல் 73 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.