ரூ. 8.75 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஹோண்டா BR-V

ஹோண்ட நிறுவனம் புத்தம் புதிய BR-V SUV  மாடலை ரூ.8.75 லட்சம் டெல்லி ஷோ ரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் BR - V மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது.

இந்த மாடல் ப்ரியோ மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் பெரிய குரோம் கிரில், பனி விளக்குகள், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் பார்பதற்கு CR-V போல் தோற்றமளிக்கிறது. பக்கவாட்டில் ப்ரியோ, அமேஸ் மற்றும் மொபிலியோ போன்ற மாடலில் உள்ள அதே வடிவமைப்பு இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் LED விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு, பெர்ல் வெள்ளை, வெள்ளை, பிரவுன், சில்வர் மற்றும் மெட்டாலிக் என 6 வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடல் 7 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பு கொண்டதாக உள்ளது. இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன்  பெட்ரோல் என்ஜின் 119 bhp (6600 rpm) திறனும் 145Nm (4600rpm) டார்க் எனும்  இழுவைதிறனும், டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் மாடலில் மட்டும் CVT  ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கிடைக்கும்.

இந்த மாடல் ஹுண்டாய் க்ரெடா, மற்றும் ரெனால்ட் டஸ்டர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

வேரியன்ட் வாரியாக இதன் விலை விவரம்:

E Petrol : Rs. 875,000
S Petrol : Rs. 990,000
V Petrol : Rs. 1,090,000
VX Petrol : Rs. 1,184,000
V CVT Petrol : Rs. 1,199,000
E Diesel : Rs. 990,000
S Diesel : Rs. 1,099,000
V Diesel : Rs. 1,185,000
VX Diesel : Rs. 1,290,000

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.