மேம்படுத்தப்பட்ட சிட்டி மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஹோண்டா: விரைவில் வெளியீடு

ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட சிட்டி மாடலின் டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த மாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்கு ஆகிய தெரியும் படி சில படங்களை வெளியிட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உட்புற வடிவமைப்பு பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும்1.5 லிட்டர் டீசல்  என்ஜினிலேயே தான் கிடைக்கும்.

தற்போது விற்பனையில் உள்ள மாடலின் பெட்ரோல் என்ஜின் 119 bhp (6600 rpm) திறனும் 145Nm (4600rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  17.8 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  18 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

அதே போல்   டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 25.1 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

ஹோண்டா நிறுவனம் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தனது அனைத்து கார்களின் விலையையும் 3 சதவீதம் அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.