அமேஸ், ஜாஸ் மற்றும் WR-V மாடல்களின் எக்ஸ்க்ளூஸிவ் எடிசன் மாடல்களை வெளியிட்டது ஹோண்டா

ஹோண்டா இந்தியா நிறுவனம் அமேஸ், ஜாஸ் மற்றும் WR-V மாடல்களின் எக்ஸ்க்ளூஸிவ் எடிசன் சிறப்பு பதிப்பு மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல்கள் அனைத்தும் டாப் வேரியன்ட்டான VX மாடலில் சில கூடுதல் வசதிகள் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள் மற்றும் விலை விவரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அமேஸ் எக்ஸ்க்ளூஸிவ் எடிசன் மடலில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்:

 • கருப்பு நிற ஸ்டிக்கர் மற்றும் சென்டர் கேப் உடன் கூடிய அலாய் வீல் 
 • எக்ஸ்க்ளூஸிவ் எடிசன் பேட்ச் 
 • இல்லுமினேஷன் கார்னிஷ் 
 • புதிய கருப்பு நிற இருக்கை கவர்
 • புதிய முன்புற ஆர்ம் ரெஸ்ட்

விலை: 

 • பெட்ரோல் MT - ரூ 7.87 லட்சம் 
 • டீசல் MT - ரூ 8.97 லட்சம் 

இந்த விலை சாதாரண VX  மாடலை விட ரூ 12,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

WR-V எக்ஸ்க்ளூஸிவ் எடிசன் மடலில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்:

 • எக்ஸ்க்ளூஸிவ் எடிசன் பேட்ச் 
 • இல்லுமினேஷன் கார்னிஷ் 
 • புதிய கருப்பு நிற இருக்கை கவர்
 • புதிய கருப்புநிற பின்புற ஸ்பாய்லர்

விலை: 

 • பெட்ரோல் MT - ரூ 9.35 லட்சம் 
 • டீசல் MT - ரூ 10.48  லட்சம் 

இந்த விலை சாதாரண VX  மாடலை விட ரூ 18,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜாஸ் எக்ஸ்க்ளூஸிவ் எடிசன் மடலில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்:

 • எக்ஸ்க்ளூஸிவ் எடிசன் பேட்ச் 
 • இல்லுமினேஷன் கார்னிஷ் 
 • புதிய கருப்பு நிற இருக்கை கவர்
 • புதிய கருப்புநிற பின்புற ஸ்பாய்லர்
 • புதிய கருப்பு நிற அலாய் 

விலை: 

 • பெட்ரோல் CVT - ரூ 9.22 லட்சம் 

இந்த விலை சாதாரண VX  மாடலை விட ரூ 19,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிடப்பட்ட விலைகளனைத்து டெல்லி ஷோரூம் விலை ஆகும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.