WR-V காம்பேக்ட் SUV மாடலின் வரைபடங்களை வெளியிட்டது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் முதன் முறையாக அதிகாரப்பூர்வமாக WR-V காம்பேக்ட் SUV  மாடலின் வரைபடங்களை வெளியிட்டது. இந்த மாடல் அடுத்த மாதம் பிரேசிலில் நடைபெறும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும். இந்த மாடல் முதலில் பிரேசிலில் வெளியிடப்படும் அதை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த வருட தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடலில் ஜாஸ் மற்றும் சிட்டி மாடலின் வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. குறிப்பாக பக்கவாட்டு வடிவமைப்பு அப்படியே ஜாஸ் போலவே உள்ளது. இதன் பின்புற படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் ஹோண்டா நிறுவனம் பிரேசிலிலும்  இந்த மாடலை காம்பேக்ட் SUV  என்றே கூறுவதால் ஒரு சிறந்த SUV  யை எதிர்பார்க்கலாம். இந்த மாடலில் ஜாஸ் மாடலில் உள்ள அதே எஞ்சின் தான் பொருத்தப்பட்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் இந்த மாடல் போர்ட் ஈக்கோ ஸ்போர்ட்  மற்றும் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா போன்ற மாடலுக்கு போட்டியாக நிலை நிறுத்தப்படும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.