நாளை வெளியிடப்படும் வெளியிடப்படும் ஹோண்டா WR-V

ஹோண்டா நிறுவனம் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட WR-V காம்பேக்ட் SUV  மாடலை நாளை வெளியிட உள்ளது. மேலும் இதன் முன்பதிவும் அனைத்து டீலர்ஷீப்புகளிலும் ஏற்கனவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ரூ. 21,000 முன்பணமாக செலுத்தி இந்த மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். பிரேசிலில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இந்த மாடல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் முதன் முதலில் இந்தியாவில் வெளியிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

முன்புறம் பெரிய கிரில், பெரிய பம்பர் மற்றும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் ஆகியவற்றுடன் ஒரு SUV  போன்ற  தோற்றத்தை தருகிறது. ஆனால் பக்கவாட்டு வடிவமைப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு அப்படியே ஜாஸ் போலவே உள்ளது. இந்த மாடலில் ஜாஸ் மற்றும் சிட்டி மாடலின் வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மாடலில் ஜாஸ் மாடலில் உள்ள அதே எஞ்சின் மற்றும் உட்புற வடிவமைப்புகள் தான் கொடுக்கப்பட்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இந்த மாடல் போர்ட் ஈக்கோ ஸ்போர்ட், மஹிந்திரா TUV300  மற்றும் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா போன்ற மாடலுக்கு போட்டியாக நிலை நிறுத்தப்படும். மேலும் இந்த மாடல் ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் விலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.