ரூ. 7.9 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஹோண்டா WR-V காம்பேக்ட் SUV

ஹோண்டா நிறுவனம் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட WR-V காம்பேக்ட் SUV  மாடலை ரூ. 7.9 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இந்த மாடல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் முதன் முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் இரண்டு வேரியண்டிலும் டீசல் என்ஜினில் இரண்டு வேரியண்டிலும் மட்டுமே கிடைக்கும்.

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்:
S MT - ரூ 7,90,500 
VX MT - ரூ 9,14,500 

டீசல்:
S MT - ரூ 8,94,500
VX MT - ரூ 10,15,400 

முன்புறம் பெரிய கிரில், பெரிய பம்பர் மற்றும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் ஆகியவற்றுடன் ஒரு SUV  போன்ற  தோற்றத்தை தருகிறது. ஆனால் பக்கவாட்டு வடிவமைப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு அப்படியே ஜாஸ் போலவே உள்ளது. இந்த மாடலில் ஜாஸ் மற்றும் சிட்டி மாடலின் வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் சன் ரூப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட்டில் இந்த மாடலில் மட்டுமே சன் ரூப் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் ஜாஸ் மாடலில் உள்ள அதே எஞ்சின் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும்  1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் 90 bhp (6000 rpm) திறனும் 110Nm (4800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும்  டீசல் என்ஜின்  மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  இதன்  பெட்ரோல் என்ஜின் மாடல் 17.5 Kmpl மைலேஜும்  டீசல் என்ஜின் மாடல் 25.5 Kmpl மைலேஜும் தரும். இந்த மாடல் CVT ட்ரான்ஸ்மிஷனில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் போர்ட் ஈக்கோ ஸ்போர்ட், மஹிந்திரா TUV300  மற்றும் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா போன்ற மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.