சிட்டி, ஜாஸ் மற்றும் சிவிக் மாடல்களை திரும்ப அழைக்கிறது ஹோண்டா

காற்றுப்பை பிரச்சனை  காரணமாக முந்தய தலைமுறை சிட்டி, ஜாஸ் மற்றும் சிவிக் மாடல்களை திரும்ப அழைக்கிறது ஹோண்டா நிறுவனம். காற்றுப்பை பிரச்சனை  காரணமாக  ஹோண்டா நிறுவனம் கார்களை திரும்ப அழைப்பது இது இரண்ட்ட்வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தயாரிக்கப்பட்ட மொத்தம்  49, 572 சிட்டி கார்கள், 7,504 ஜாஸ் கார்கள் மற்றும் 600 சிவிக் கார்களை திரும்ப அழைக்கிறது ஹோண்டா நிறுவனம். இந்த கார்கள் அனைத்தும் இலவசமாக சரி செய்து தரப்படும்.

தங்கள் கார்களும் இந்த வரிசையில் உள்ளதா என்பதை VIN எண்ணை வைத்து தெரிந்து கொள்ளலாம். பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் இந்த கார்களை ஹோண்டா நிறுவனம் சரி செய்து கொடுத்து வருகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.