2016 ஆம் ஆண்டு வெளியிடப்படும் ஹோண்டா FCX கிளாரிட்டி புயெல் செல் கார்

ஹோண்ட நிறுவனம் தனது முதல் புயெல் செல் காரை 2016 ஆம் ஆண்டு வெளியிடும் எனவும் மேலும் டோக்யோ மோட்டார் கண்காட்சியில் இந்த மாடல் காட்சிப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த மாடல் FCX கிளாரிட்டி மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புயெல் செல் கார் ஆகும். இந்த மாடல் ஹைட்ரோஜென் வாயு மூலம் இயங்கும். 

இந்த  ஹைட்ரோஜென் வாயு புயெல் செல்லிற்குள் செலுத்தப்படும் இந்த வாயு புயெல் செல்லில் வேதியியல் வினை மூலம் எலெக்ட்ரிக் திறனை உருவாக்கும். இந்த எலெக்ட்ரிக் திறன் ஒரு பேட்டரியில் சேமிக்கப்படும். இந்த பேட்டரி மூலம் மின் மோட்டார்கள் இயங்கும்.

இந்த மாடல் ஒரு முறை முழுமையாக  ஹைட்ரோஜென் வாயுவை நிரப்பினால் 700 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது சந்தேகமே. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.