20 ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் ஹுண்டாய்

ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் 20 ஆண்டு கால பயணம் நிறைவடைந்ததை கொண்டாடி வருகிறது. ஹுண்டாய் இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.யன்க் கீ கோ இந்நிகழ்ச்சியில் பேசிய போது, ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் முதன்மையான ஆட்டோ மொபைல் நிறுவனமாகவும் மக்களின்  மிகவும் நம்பிக்கைக்குரிய ப்ராண்டாகவும் மாற்றுவதே ஹுண்டாய் நிறுவனத்தின் குறிக்கோள் என கூறினார். 

சரியாக இருபது வருடங்களுக்கு முன்பு, 1996 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாள் ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. அதைதொடர்ந்து 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் முதல் ஹுண்டாய் தொழிற்சாலையை சென்னையில் தொடங்கியது. 

20 ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சில சிறப்பு சலுகைகளையும் பரிசுகளையும் வழங்குகிறது ஹுண்டாய் நிறுவனம். மேலும் எக்சென்ட் மற்றும் கிரேன்ட் இ10 மாடல்களின் சிறப்பு பதிப்புகளையும் வெளியிட இருக்கிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.