ரூ.12.23 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஹூண்டாய் க்ரெடா ஆண்டுவிழா சிறப்பு பதிப்பு மாடல்

ஹூண்டாய் நிறுவனம் பெட்ரோல் என்ஜின் கொண்ட க்ரெடா ஆண்டுவிழா சிறப்பு பதிப்பு மாடலை ரூ.12.23 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் டீசல் என்ஜின் கொண்ட மாடலை ரூ.13.76 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் வெளியிட்டுள்ளது.  ஹுண்டாய் நிறுவனம் க்ரெடா மாடலின் முதலாமாண்டு நிறைவுவிழாவை கொண்டாடும் விதமாக  க்ரெடா ஆண்டுவிழா சிறப்பு பதிப்பு மாடலை பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த மாதம் வெளிப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுவிழா சிறப்பு பதிப்பு மாடலில் புதிய  கிராபிக்ஸ், புதிய இரட்டை வண்ணம், ஆண்டுவிழா பேட்ச்   மற்றும் சில ஒப்பனை வேலைபாடுகள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. உட்புறமும் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பாதிப்பு மாடல் SX+ வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.

இந்த சிறப்பு பாதிப்பு மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல்   மற்றும்  டீசல்  என்ஜினில் கிடைக்கும். இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 123 bhp (6400 rpm) திறனும் 154Nm (4850rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 128 bhp (4000 rpm) திறனும் 265Nm (1900-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.