இயான் மாடலை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் சுமார் 7,657 இயான் கார்களை கிளட்ச் கேபிளில் உள்ள பிரச்னை காரணமாக திரும்ப அழைக்கிறது. கிளட்ச் கேபிள் பேட்டரி கேபிளை சேதப்படுத்தும் அபாயம் உள்ளதால் அதனை சோதனை செய்ய ஹூண்டாய் நிறுவனம் இயான் கார்களை திரும்ப அழைக்கிறது. இந்த சோதனை இலவசமாக செய்து தரப்படும். 

2015 ஆம்  ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை தயாரிக்கப்பட்ட கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது. உங்கள் காரும் இந்த லிஸ்டில் இருந்தால் அருகில் உள்ள டீலர்ஷிப்பை தொடர்பு கொள்ளுங்கள். இந்த மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கிறது.
  

இதன் 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 56 bhp (5500 rpm) திறனும் 76Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின்   மாடல் 21.1 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 
 

இதன் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின்  மாடல் 69 bhp (6200 rpm) திறனும் 96Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின்   மாடல் 20.3 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.