வெளிப்படுத்தப்பட்டது ஹுன்டாய் கோனா காம்பேக்ட் SUV

ஹுன்டாய் நிறுவனம் கோனா காம்பேக்ட் SUV மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இதன் டீசர் படங்களை சில நாட்களாகவே வெளியிட்டு வருகிறது ஹுன்டாய் நிறுவனம். இந்த மாடல் தென் கொரியா வட அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விரைவில் வெளியிடப்படும். 

இந்த மாடல் ஹுன்டாய் நிறுவனத்தின் எலைட் i20 மாடலின் அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு முழுமையான SUV போன்ற தோற்றத்தை தரவில்லை ஒரு கிராஸ் ஓவர் போன்ற தோற்றத்தை தான் தருகிறது. மேலும் இந்த மாடலின் வெளிப்புறத்தில் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், பாடி கிளாடிங், ரூப் ரயில் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் சொகுசு கார் போன்ற தோற்றத்தை தருமளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்ஜின் தொடர்பான விவரங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் க்ரெட்டா அல்லது எலைட் i20 எஞ்சினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும். இந்த மாடல் இந்தியாவிலும் கண்டிப்பாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்பட்டால் மாருதி சுசூகி விட்டாரா பிரீஸா மற்றும் ஹோன்டா WR-V போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலை நிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.