வெளியிடப்பட்டது 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய புதிய ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் நிறுவனம் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய புதிய வெர்னா மாடலை ரூ 7.79 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் E மற்றும் EX என இரண்டு வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:
ஹூண்டாய் வெர்னா 1.4 லிட்டர் E -  ரூ 7.79 லட்சம்
ஹூண்டாய் வெர்னா 1.4 லிட்டர் EX -  ரூ 9.09 லட்சம்

எலைட் i20 மாடலில் உள்ள அதே 1.4 லிட்டர் காப்பா பெட்ரோல் எஞ்சின் மாடல் தான் இந்த மடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 100 bhp (6000 rpm) திறனும் 132Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் 19.1 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

முந்தய தலைமுறை வெர்னா மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினில் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஹூண்டாய் நிறுவனம் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.