2017 ஆம் ஆண்டு க்ரெடா மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு க்ரெடா மாடலின் டீசர் படங்களை பிரேசில் நாட்டில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் இந்த வருடம் பிரேசிலில் நடைபெறும் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தியாவில் 2017 ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படலாம்.

இந்த மாடலில் முன்புறத்தில் புதிய மற்றும் பெரிய க்ரில் மற்றும் பின்புறத்தில் புதிய விளக்குகள் ஆகியாவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படங்களின் அடிப்படையில் பார்த்தல் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சினிலும் மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் இந்த மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல்  என்ஜின், மற்றும் 1.4  & 1.6 லிட்டர் டீசல்  என்ஜின்களில் கிடைக்கிறது.  மேலும் இந்த மாடல் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   உடனும் கிடைக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இந்த மாடல் பெரும் எண்ணிக்கையை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.