அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் புத்தம் புதிய ஹூண்டாய் சேன்ட்ரோ (AH2) மாடலின் முன்பதிவு

ஹூண்டாய் நிறுவனம் புத்தம் புதிய AH2 என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்படும் ஹேட்ச் மாடலின் முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் அக்டோபர் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலுக்கு என்ன பெயர் சூட்டலாம் என பிரத்தியேக போட்டியை ஹூண்டாய் நிறுவனம் நடத்தியது. மேலும் இந்த போட்டியில் பங்குபெற்ற பெரும்பாலானோர் சேன்ட்ரோ என்ற பெயரை தான் தேர்வு செய்துள்ளனர் எனவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாடல் ஹூண்டாய் கிராண்ட் i10 மாடல் தயாரிக்கப்பட்டுள்ள அதே HA பிளாட்பார்மில் தாள் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இந்த மாடலில் காற்றுப்பை, ABS மற்றும் EBD போன்ற பாதுகாப்பு அம்சங்களும் கொடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எஞ்சின் தொடர்பான எந்த விவரங்களையும் ஹூண்டாய் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. எனினும் இந்த மாடல் AMT ட்ரான்ஸ்மிஷனில் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்த மாடல் வெளியிடப்பட்டால் மாருதி சுசூகி செலிரியோ, டாடா டியாகோ, ரெனோ க்விட் மற்றும் மாருதி சுசூகி வேகன் R போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.