அடுத்த தலைமுறை வெர்னா மாடலின் இரண்டாவது டீசரை வெளியிட்டது ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு வெர்னா மாடலின் உட்புற டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் கடந்த வருடமே சீனாவில் வெளியிடப்பட்டது. தற்போது தான் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. சீனா வெர்சன் மாடலுக்கும் இந்திய மாடலுக்கும் முன்புறம் மற்றும் பின்புறத்தில்  சில வேறுபாடுகள் உள்ளது. இது ஐந்தாம் தலைமுறை மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் ஒரு சிறிய எலன்ட்ரா மாடல் போல் தோற்றமளிக்கிறது. எலன்ட்ரா மாடலின் வடிவங்கள் இதில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஹூண்டாய் நிறுவனத்தில் புதிய தனித்துவமான க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடலை விட 29 மில்ல்லி மீட்டர் அதிக நீளமும் 15 மில்லி மீட்டர் அதிக அகலமும் கொண்டது. மேலும் வீல் பேஷும் 10 மில்லி மீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவில் அதே  1.4 & 1.6 லிட்டர் பெட்ரோல்  மற்றும் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஒரு சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.