20 ஆம் ஆண்டுநிறைவு விழாவை ஒட்டி எக்சென்ட் மாடலின் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டது ஹுண்டாய்

ஹுண்டாய் நிறுவனம் தனது 20 ஆம் ஆண்டுநிறைவு விழாவை ஒட்டி எக்சென்ட் மாடலின்  சிறப்பு பதிப்பு மாடலை ரூ. 6.22 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் S வேரியண்டில் மட்டும் கிடைக்கும். பெட்ரோல் மாடல் ரூ. 6.22 லட்சம் விலையிலும் டீசல் மாடல் ரூ. 7.15 லட்சம் விலையிலும் கிடைக்கும். 

வெளிப்புறத்தில் 20 ஆம் ஆண்டுநிறைவு பேட்ச், பக்கவாட்டு கிராபிக்ஸ், முகப்பு குரோம் கிரில் மற்றும் சில அலங்கார வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது. உட்புறம் புதிதாக சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 6.2 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.
 

இந்த மாடல்  1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 83 bhp (6000 rpm) திறனும் 116Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜின்  மாடல் 72 bhp (4000 rpm) திறனும் 184Nm (1750-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. ஹுண்டாய் நிறுவனம் இந்த சிறப்பு பதிப்பு மாடலை 2400 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்க இருக்கிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.