ஹூண்டாய் i10 மாடலின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது

ஹூண்டாய் நிறுவனம் முதல் தலைமுறை  i10 மாடலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது. இந்த மாடல் முதலில் அக்டோபர் மாதம் 2007 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இதன் இரண்டாம் தலைமுறை மாடலான கிராண்ட் i10 மாடலை செப்டம்பர் மாதம் 2013  ஆம் ஆண்டு வெளியிட்டது. இருப்பினும் மக்களிடம் i10 மாடலுக்கு சிறந்த வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து இந்த மாடலை வெளியிட்டு வந்தது. 

பல புதிய மாடல்களின் வரவால் தற்போது இந்த மாடலுக்கான வரவேற்பு குறைந்து வருவதால் ஹூண்டாய் நிறுவனம்  முதல் தலைமுறை  i10 மாடலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.