பெர்பார்மென்ஸ் மாடல்களுக்காக புதிய ப்ராண்டை அறிமுகப்படுத்தும் ஹுண்டாய்

ஹுண்டாய் நிறுவனம் பெர்பார்மென்ஸ் மாடல்களுக்காக பிரத்தியேகமான புதிய N ப்ராண்டை ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்த  இருக்கிறது.  ஏற்கனவே ஹுண்டாய் நிறுவனம் i 20 மற்றும் பல மாடல்களின் பெர்பார்மென்ஸ் பதிப்பை சோதனை செய்து வருகிறது. 

பெர்பார்மென்ஸ் மாடல்களுக்காக புதிய ப்ராண்டை ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தும் போது குறிப்பாக N 2025 விசன் கிரான் டூரிஸ்மோ கான்செப்ட் மாடல்  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் சில படங்களை மட்டும் ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ஒரு ட்ராக் ரேஸ் மாடல் ஆகும். 

மேலும் புதிய தலைமுறை  i 20 அடிப்படையிலான ராலி மாடலையும் ஹுண்டாய் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இவற்றில் பெரும்பாலான மாடல்கள் ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.