ஜெனெசிஸ் G90 மாடலின் வரைபடத்தை வெளிப்படுத்தியது ஹுண்டாய்

ஹுண்டாய் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் சொகுசு கார்களை ஜெனெசிஸ் பிராண்டில் வெளியிடுவதாக அறிவித்திருந்தது. தற்போது ஜெனெசிஸ்  G 90 மாடலின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. 

உலகின் சிறந்த பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த காராக இருக்கும் என ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் கொரியாவில் வெளியிடப்படும் எனவும் ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டுக்குள் 6 மாடல்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

இந்த மாடல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சொகுசு அனுபவத்தை தரும் மாடலாக இருக்கும். ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள வரைபடம் முகப்பில் ஜெனெசிஸ் எம்பலம் பொறிக்கப்பட்டு கம்பீரமான தோற்றத்தை தருகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.